சுவையான வாழைப்பூ வடை செய்வது எப்படி?
நமது வீடுகளில் மாலை நேரங்களில் தேநீருடன் ஏதாவது உணவினை சாப்பிடுவதுண்டு. அந்த வகையில் தற்போது இந்த பதிவில் சுவையான வாழைப்பூ வடை செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- வாழைப்பூ – 150 கிராம்
- பொட்டுக்கடலை – 6 மேசைக்கரண்டி
- வத்தல் மிளகாய் – 5 பெருங்காயம் கால் தேக்கரண்டி
- தேங்காய்ப்பூ – 3 மேசைக்கரண்டி
- பெரிய வெங்காயம் – 30 கிராம்
- மோர் – ஒரு டம்ளர்
- உப்பு – தேவைக்கேற்ப
- எண்ணெய் – தேவைக்கேற்ப
செய்முறை
முதலில் வாழைப்பூவை மோர் சேர்த்து அவனது எடுத்து நன்கு பிழிந்து கொள்ள வேண்டும். பின் பொட்டுக்கடலை, மிளகாய் வற்றல், தேங்காய் பூ சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். வெங்காயத்தை தோலுரித்து நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு பாத்திரத்தில் வேகா வாய்த்த வாழைப்பூவுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். வாழைப்பூ வெங்காயத்துடன் அரைத்த கலவையை, ஒன்றரை தேக்கரண்டி உப்பு மற்றும் பெருங்காயம் சேர்த்து, எல்லாவற்றையும் நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். பின் பிசைந்து வைத்திருக்கும் கலவையை சிறு சிறு உருண்டைகளாக தட்டி கொள்ள வேண்டும்.
அதன் பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தட்டி வைத்திருக்கும் வடையை ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் போட்டு பொரித்து எடுக்க வேண்டும். இப்பொது சுவையான வாழைப்பூ வடை தயார்.