பட்டப்பகலில் நடுரோட்டில் வியாபாரி ஒருவரை சரமாரியாக வெட்டி சாய்த்த மர்ம கும்பல்.!
பெங்களூரில் டி.ஜே.ஹள்ளி என்ற பகுதியில் பர்னிச்சர் வியாபாரம் செய்து வரும் அம்ஜத் என்பவர், சாலையில் நடந்த சென்று கொண்டிருந்த போது பட்டப்பகலில் திடீரென அவரை சுற்றி வளைத்த 7 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டி சாய்த்தனர். இதில் சம்பவ இடத்திலேயே அம்ஜத் உயிரிழந்தார். பின்னர் இந்த சம்பவங்கள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில் அந்த மர்ம கும்பல் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பட்டப்பகலில் நடுரோட்டில் நடந்த இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.