டெல்லி வன்முறை : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46-ஆக உயர்வு
டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான நடந்த பேரணியில், ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் வடகிழக்கு டெல்லி கலவர பூமியாக மாறியது. இந்த வன்முறையில் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் பலியானோரின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது.