சென்னை ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்த தோனி.!
2020ம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 29ம் தேதி தொடங்கவுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் தொடக்க விழா முடிந்து, முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை, சென்னை அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்த நிலையில் ரசிகர்கள் தோனி எப்பொழுது வருவார் என்ற கேள்விக்கு சென்னை அணி நிர்வாகம் மார்ச் 2ம் தேதி வருவார் என தெரிவித்திருந்தன. அந்த வகையில் ஐபிஎல் தொடரில் பங்கேற்க பயிற்சி எடுப்பதற்காக மஹேந்திரசிங் தோனி சென்னை வந்தடைந்தார்.
Every goose shall bump with First Day First Show feels! Just #StartTheWhistles! #HomeSweetDen ???????? pic.twitter.com/DpQBIqahZe
— Chennai Super Kings (@ChennaiIPL) March 1, 2020
விமானம் மூலம் சென்னை வந்தடைந்த தோனிக்கு சிஎஸ்கே நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்திலிருந்து தங்கியிருக்கும் நட்சத்திர விடுதிக்கு சென்ற தோனி, அங்கு செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளை பார்த்து ரசித்தார். தோனியின் சென்னை வருகையை சிஎஸ்கே நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.