நாளை பட்ஜெட் கூட்டத்தொடர் ! டெல்லி வன்முறை குறித்து கேள்வியெழுப்ப திட்டம்

Default Image

நாளை 2-வது  பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில் டெல்லி வன்முறை குறித்து கேள்வியெழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளது.

2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்தார்.எனவே பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நாளை தொடங்குகிறது.நாளை தொடங்கி ஏப்ரல் 3-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

பட்ஜெட் மீதான விவாதத்தில்  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளிக்க உள்ளார்.இந்த கூட்டத்தொடரில் 40-க்கும் மேற்பட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த கூட்டத்தில் டெல்லி வன்முறை குறித்து கேள்வியெழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்