ரசாயன மீன்களை விற்றால் உரிமம் ரத்து -சோமசுந்தரம் அதிரடி..!
மதுரை கரிமேடு மீன் சந்தையில் உள்ள மீன் கடைகளில் மீன்கள் மீது ரசாயனம் கலந்து விற்கப்படுவதாக புகார் எழுந்தது.இதை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு 20 பேர் கொண்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதனை செய்தனர்.
இந்த சோதனையில் கரிமேடு மீன் சந்தையில் 53 மீன் கடைகளில் பார்மாலின் என்ற ரசாயனம் கலந்த மீன் விற்பனை செய்தது உறுதிசெய்யப்பட்டது. பின்னர் அந்த கடைகளில் இருந்த ரசாயனம் கலந்த 2 டன் மீன்களை பறிமுதல் செய்தனர்.மேலும் பறிமுதல் செய்யப்பட்ட மீன் கடை உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து மதுரை விமான நிலையத்தில் பேசிய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சோமசுந்தரம் , உணவு பொருட்களில் கலப்படம் செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் இது இனி தொடரக்கூடாது என கூறினார். மீன் கடைகளில் நடத்தப்பட்ட சோதனை போல மீன்களை ஏற்றி வரும் லாரிகளிலும் சோதனை செய்ய உள்ளதாக கூறினார்.