ஜெயின் மெட்டல் நிறுவனத்தில் கணக்கில் காட்டாத 400 கோடி ரூபாயை வருமான வரித்துறை கண்டுபிடிப்பு.!

சென்னை மாதவரம் அருகே இயங்கிவந்த ஜெயின் மெட்டல் நிறுவனத்தின் கடந்த 25ம் தேதி முதல் நடந்து வந்த வருமான வரித்துறை சோதனை தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. ஜெய்ன் மெட்டல் குழுமத்திற்கு சொந்தமான 30 இடங்களில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத வருமானம் ரூ.400 கோடி கண்டுபிடித்து வருமான வரித்துறை அறிவித்துள்ளது. இதனிடையே தனிமென்பொருள் மூலம் வருமான வரித்துறைக்கு தெரியாமல் வருவாய் மறைக்கப்பட்டுள்ளது இந்த சோதனை மூலம் தெரியவந்துள்ளது. மேலும் பல்வேறு ஆவணங்களும்,  காசோலைகளை சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர கணக்கில் காட்டத ஒரு கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் செய்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்