மதுரையில் டன் கணக்கில் சிக்கிய ரசாயனம் தடவிய மீன்..!
மதுரை கரிமேடு மீன் சந்தையில் உள்ள மீன் கடைகளில் மீன்கள் மீது ரசாயனம் கலந்து விற்கப்படுவதாக புகார் எழுந்தது.இதை தொடர்ந்து நேற்று இரவு 20 பேர் கொண்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதனை செய்தனர்.
இந்த சோதனையில் கரிமேடு மீன் சந்தையில் 53 மீன் கடைகளில் பார்மாலின் என்ற ரசாயனம் கலந்த மீன் விற்பனை செய்தது உறுதிசெய்யப்பட்டது. பின்னர் அந்த கடைகளில் இருந்த ரசாயனம் கலந்த 5 டன் மீன்களை பறிமுதல் செய்தனர்.
மேலு பறிமுதல் செய்யப்பட்ட மீன் கடை உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.