திருச்சியில் அதிரடி 23 குடிநீர் ஆலைகளுக்கு சீல்.!
நிலத்தடி நீரை உறிஞ்சும் குடிநீர் நிறுவனங்கள் குறித்த வழக்கில் நேற்று சென்னை உயர்நீதிமன்றம் ஒரு உத்தரவைப் பிறப்பித்தது அதில் உரிமம் பெறாமல் இயங்கக்கூடிய ஆலைகளை மூட நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பரிந்துரை அனுப்பியதாக கூறியது.
ஆனால் அந்த உத்தரவு வெறும் உத்தரவாகவே உள்ளது என நீதிபதிகள் கண்டித்தனர்.மேலும் வருகின்ற மார்ச் 3-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் மாவட்ட ஆட்சியாளர்கள் ஆஜராக நேரிடும் என கூறினர்.
இந்நிலையில் இன்று திருச்சி மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த 23 குடிநீர் ஆலைகளுக்கு அதிகாரிகள் சீல் வைக்கப்பட்டது.மேலும் ஸ்ரீரங்கம், துறையூர், மண்ணச்சநல்லூர், முசிறி, லால்குடி பகுதிகளில் ஆலைகளின் ஆழ்துளை கிணறுகளுக்கும் சீல்வைக்கப்பட்டது.