தஞ்சாவூரில் தொடங்கிய ஜல்லிக்கட்டு..! 650 காளைகள் , 450 காளையர்கள் பங்கேற்பு…!
தஞ்சை மாவட்டத்தில் உள்ள நாஞ்சிக்கோட்டையில் 15 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
வீரர்களுக்கும், காளைகளுக்கு எந்தவித காயமும் ஏற்படாமல் இருக்க வாடிவாசலில் இருந்து 100 மீட்டர் தூரம் வரை 1 அடிக்கு தென்னை நார்கள் போடப்பட்டு உள்ளது. அதேபோல் காளைகள், பார்வையாளர் இருக்கும் பகுதிக்கு சென்றுவிடாமல் இருக்க இரும்பு கம்பிகள், கட்டைகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது .
முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.இந்த ஜல்லிக்கட்டில் 650 காளைகள் மற்றும் 450 காளையர்கள் பங்கேற்று உள்ளனர்.
தஞ்சை, பெரம்பலூர், திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை, உள்பட பகுதிகளில் இருந்து 650 காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.