நேர்மையை நோக்கி யார் பயணிக்கிறார்களோ அவர்கள் நிச்சயம் இணைவார்கள் – கமல்ஹாசன் பேச்சு
திமுக, அதிமுக அல்லாத கட்சிகளோடு கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக நம்புகிறேன் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார். பின்னர் அமையும் கூட்டணி தங்கள் தலைமையில் அமைய வேண்டும் என விரும்புவதாகவும், ஆனால் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் எட்டப்படும் உடன்பாடுகளை பொறுத்து கூட்டணி அமையும் எனவும் குறிப்பிட்டார்.
இதையடுத்து ரஜினிகாந்துடன் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்கு, தமிழகத்தின் மேம்பாடு என்ற அடிப்படையில் தாங்கள் இருவரும் ஒன்றான கருத்துகளை தெரிவித்தோம் என்றும் நேர்மையை நோக்கி யார் பயணிக்கிறார்களோ அவர்கள் நிச்சயம் இணைவார்கள் என கூட்டணி குறித்து கமல்ஹாசன் சூசகமாக குறிப்பிட்டார்.