டெல்லி வன்முறை : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42-ஆக உயர்வு
டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான நடந்த பேரணியில், ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டு வடகிழக்கு டெல்லி கலவர பூமியாக மாறியுள்ளது. இந்த வன்முறையில் இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
டெல்லி வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் , நேற்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேரில் ஆய்வு செய்தனர் .
நேற்று டெல்லி உயர்நீதிமன்றம் வன்முறையை தூண்டும் வகையில் பேசிய தலைவர்கள் மீது எ ஃப் .ஐ .ஆர் பதிவு செய்யதது ஏன் என கேள்வி எழுப்பியது. அதற்கு பதிலளித்த டெல்லி போலீசார் தற்போதைய சூழலில் எ ஃப் .ஐ .ஆர் பதிவு செய்தால் இயல்பு நிலை திரும்ப எந்தவகையிலும் உதவாது என கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது.