ஆம் ஆத்மி கவுன்சிலருக்கு சொந்தமான ஆலையில் சோதனை.!
- டெல்லி வன்முறை தொடர்பாக தாஹிர் உசேன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
- டெல்லி ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேனுக்கு சொந்தமான ஆலையில் தடயவியல் ஆய்வாளர்கள் சோதனை.
டெல்லி ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேனுக்கு சொந்தமான ஆலையில் தடயவியல் ஆய்வாளர்கள் சோதனை மேற்கொண்டுள்ளனர். டெல்லி வன்முறை தொடர்பாக தாஹிர் உசேன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் ஆய்வு செய்து வருகின்றனர்.
டெல்லியில் ஏற்பட்ட வன்முறையில் 38 பேர் உயிரிழந்துள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றன. இந்த வன்முறையில் மத்திய உளவுத்துறையில் டிரைவராக இருந்த அங்கித் சர்மா என்பவர் கொலை செய்யப்பட்டு சாக்கடைக்குள் வீசப்பட்டார். இந்த கொலையில் ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேனுக்கு தொடர்பு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதற்கு ஏற்றாற்போல தாஹிர் வீட்டிற்கு அருகில் உள்ள சாக்கடையில் இருந்து தான் அங்கித் சர்மா சடலம் மீட்கப்பட்டதால் தாகிர் உசைன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இந்நிலையில் நேற்று குடியரசு தலைவரை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மன்மோகன் சிங் மற்றும் பல மூத்த தலைவர்கள் சந்தித்த நிலையில் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது டெல்லி வன்முறைக்கு காங்கிரசும், ஆம் ஆத்மி கட்சிகள்தான் காரணம் என கூறினார். மேலும் கையில் ஆயுதங்களுடன் ஆம் ஆத்மி கவுன்சிலர் வன்முறையில் ஈடுபடும் வீடியோ கிடைத்திருக்கிறது எனவும் தாகீர் உசேன் வீடு கலகத் தொழிற்சாலை என்பதைக் காட்டும் வீடியோ உள்ளது என கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.