கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அமெரிக்க அதிபர் டிரம்பின் அறிவிப்புக்கு எதிர்ப்பு!
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உருக்கு மற்றும் அலுமினியம் இறக்குமதிக்கு வரி விதிக்கப்படும் என்ற அமெரிக்க அதிபர் டிரம்பின் அறிவிப்பு ஏற்க முடியாதது என விமர்சித்துள்ளார். அமெரிக்காவுக்கு உருக்கு மற்றும் அலுமினிய ஏற்றுமதியில் கனடா முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்நிலையில், நாட்டின் உருக்கு மற்றும் அலுமினிய தொழில்துறையை பாதுகாப்பதற்காக, இறக்குமதி கட்டுப்படுத்தப்படும் எனக் கூறிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இறக்குமதி செய்யப்படும் உருக்குக்கு 25 சதவீதமும், அலுமினியத்துக்கு 10 சதவீத வரியும் விதிக்கப்படும் எனக் கூறினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, டிரம்பின் இந்த வரி ஏற்க முடியாதது என கூறியுள்ளார். டிரம்பின் இந்த நடவடிக்கையால், இருநாடுகளின் சந்தையிலும் பாதிப்பு ஏற்படும் எனக் கூறிய கனடா பிரதமர் ட்ரூடோ, தங்கள் நாட்டின் தொழில்துறையை பாதுகாக்க தங்களாலும் முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.