ரூ 1500 போனும், அம்பானியின் சூட்சமமும்…!

Default Image

அம்பானிக்கு உடம்பெல்லாம் மூளை என்றுதான் சொல்ல வேண்டும்….
1500 ரூபாய்க்கு மொபைல் போன். அந்த பணமும் திருப்பி தரப்படும். இதில் உள்ள சூட்சமம் யாருக்காவது புரிகிறதா?
தோராயமாக 100 கோடி மொபைல் 1500 ரூபாய்க்கு கொடுக்க டார்கெட்.
1. முதலில் ஒன்றை கவனியுங்கள் இது திரும்ப கொடுக்கப்படும் பணம். ஆக இது விற்பனை இல்லை. வைப்பு பணம். No sales, its only security ammount. இந்த பணத்திற்கு எல்லாம் GST கிடையாது. மொபைல் போன் விற்பனைக்கு 12% GST. ஆனால் இந்த திட்டம் மூலமாக அது தவிர்க்கப்படுகிறது. அலைபேசி சாதனமும் உங்கள் கையில் கிடைத்துவிடுகிறது.
2. 1500 X 100 கோடி = 150000 கோடி அம்பானி குழுமத்தில் உள்ளே வந்து விட்டது. அதுவும் விற்பனை வரி கட்டாமல். 3 வருடம் கழித்து இதை திரும்ப பெற்று கொள்ளலாம்.
3. இந்த 3 வருடத்தில் தனது சொந்த பணத்தை முதலீடு செய்யாமல், இந்த ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் கோடி ரூபாயை எந்த துறையில் வேண்டுமானாலும் அம்பானியால் முதலீடு செய்ய முடியும்….. அதிலிருந்து லாபமும் பெற முடியும்….
4. அப்படி முதலீடு செய்ததில் 20% லாபம் என்று குறைந்த பட்ச கணக்கை வைத்து கொள்வோம். ஊரான் பணத்தை முதலீடாக செய்து அதில் வந்த லாபம் மட்டும் 30000 கோடி (குறைந்தபட்சம்). இது ஒரு வருஷத்துக்கு மட்டும். மூன்று வருஷத்திற்கு நீங்கள் கணக்கு போட்டு பாருங்கள். குறைந்தது 75000 கோடி. இன்னும் முதலீடு அப்படியே தான் இருக்கிறது.
5. மூன்று வருடம் கழித்து, முதலீடு 150000 கோடி மக்களிடம் திரும்ப கொடுக்கப்பட்டு, மொபைல் போன் தயாரிக்கப்பட்ட செலவு அதிகபட்சமாக 15000 கோடியை கழித்து பார்த்தால், நிகர லாபம் மட்டும் 60,000 கோடி. முதலீடு இல்லை. விற்பனை வரி இல்லை.
6. அந்த மொபைல்களால் இரண்டாம் கட்ட வருமானமாக ஜியோ நிறுவனத்திற்கு எவ்வளவு வரும் என்பதையும் இங்கு கணக்கில் எடுக்க வேண்டும்….!!!
மாஸ்டர்_பிளான்… இதை திருட்டுத்தனம் அல்லது சாமர்த்தியம் என்று எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள்….. அது உங்கள் மன பக்குவத்தை பொறுத்து. என்னை பொறுத்தவரை இது சாமர்த்தியம் தான்…..!!!
ஒரே ஒரு கேள்வி மட்டும் உருத்துகிறது… இதை ஏன் bsnl செய்ய முன்வரவில்லை….?

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்