சத்தான பாசிப்பருப்பு இட்லி செய்வது எப்படி?
நாம் காலையில் நமது வீட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு எதாவது உணவினை செய்து கொடுப்பது வழக்கம். அந்த வகையில் தற்போது இந்த பதிவில் சுவையான பாசிப்பருப்பு இட்லி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- பாசிப்பருப்பு – ஒரு கப்
- பச்சரிசி – கால் கப்
- சர்க்கரை – ஒரு கப்
- தேங்காய் துருவல் – கால் கப்
- ஏலப்பொடி – அரை டேபிள்ஸ்பூன்
- ஆப்பசோடா – ஒரு சிட்டிகை
- நெய் -2 டேபிள்ஸ்பூன்
செய்முறை
முதலில் பருப்பு மற்றும் அரிசி இரண்டையும் தனித்தனியே ஊறவைத்து ஒருமணி நேரம் கழித்து கரகரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் தேங்காய் துருவல், சர்க்கரை, ஏலப்பொடி, பாதி நெய், ஆப்ப சோடா சேர்த்து நன்றாக கலந்து இட்லி மாவு பதத்தில் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் நெய் தடவிய இட்லி தட்டில் ஊற்றி ஆவியில் வேகவைக்கவேண்டும்.வந்ததற்கு அடையாளமாக ஒரு கத்தியை நுழைதல் ஒட்டாமல் வரவேண்டும். இப்போது சுவையான பாசிப்பருப்பு இட்லி தயார்.