சுவையான வெண்டைக்காய் பக்கோடா செய்வது எப்படி?
நமது வீடுகளில் மாலை நேரங்களில் தேநீருடன் ஏதாவது சிற்றுண்டி சாப்பிடுவதை விரும்புவார்கள். அந்த வகையில் தற்போது இந்த பதிவில் சுவையான வெண்டைக்காய் பக்கோடா செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- வெண்டைக்காய் – 200 கிராம்
- வெங்காயம் – ஒன்று
- கடலை மாவு – ஒரு கப்
- கார்ன்ஃப்ளார் – அரை கப்
- முந்திரிப்பருப்பு -10
- மிளகாய்த்தூள் -ஒரு தேக்கரண்டி
- தனியா தூள் – ஒரு தேக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் -பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை
முதலில் வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். முந்திரியை பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். வெண்டைக்காயை ஒரு அங்குல நீளத்திற்கு அல்லது வட்டமாக வெட்டிக் கொள்ளலாம். பின் ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம் முந்திரிப்பருப்பு உப்பு மிளகாய் தூள் தனியா தூள் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும் என்று தண்ணீர் சேர்த்து நன்கு பிசறி கொள்ள வேண்டும்.
பின் இந்த கலவை அரை மணி நேரம் ஊறவைத்து பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி பிசைந்து வைத்திருக்கும் வெண்டைக்காயை சிறிது சிறிதாக போட்டு நன்கு சிவக்க பொரித்து எடுக்கவேண்டும். இப்போது சுவையான வெண்டைக்காய் பக்கோடா தயார்.