பிரியாணி கடைக்கும், அண்டாக்களுக்கும் பாதுகாப்பு வேண்டும் -பாஜக பேரணியையொட்டி போலீசில் மனு

- பாஜக சார்பில் பேரணி நடைபெற இருப்பதால் பிரியாணிக்கும், பிரியாணி அண்டாக்களுக்கும் பாதுகாப்பு வழங்குமாறு கடை உரிமையாளர்கள் காவல்நிலையத்தில் மனு ஒன்று அளித்துள்ளனர்.
அண்மையில் மத்திய அரசால் கொண்டுவந்த குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டமும், பேரணியும் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் சிஏஏவுக்கு ஆதரவாக பாஜக சார்பில் நாளை (வெள்ளிக்கிழமை) திருப்பூரில் பேரணி நடைபெறவுள்ளது. இந்த பேரணி சிடிசி பகுதியில் தொடங்கி பெரியக்கடை வழியாக செல்கிறது.
இதனிடையே திருப்பூரில் பெரியக்கடை வீதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட பிரியாணி கடைகள் இயங்கி வருகின்றனர். இந்த நிலையில் பாஜக சார்பில் பேரணி அறிவித்துள்ள நிலையில், பிரியாணி கடை சங்கத்தினர் திருப்பூர் தெற்கு காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளனர். அதில் பாஜக சார்பில் பேரணி நடைபெற இருப்பதால், எங்களது பிரியாணி கடைக்கும் மற்றும் பிரியாணி அண்டாவிற்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வரை.!
April 8, 2025
பவர்பிளேக்கு முன்னாடி அவுட் ஆகுறீங்க… ரோஹித் ஷர்மாவுக்கு விமர்சித்து அட்வைஸ் கொடுத்த கவாஸ்கர்!
April 8, 2025