கலவரத்தில் கொல்லப்பட்ட தலைமை காவலர் குடும்பத்திற்கு ₹ 1 கோடி இழப்பீடு
டெல்லியின் மாஜ்பூரில் நடந்த சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் பலியான தலைமை காவலர் ரத்தன் லால் குடும்பத்துக்கு டெல்லி அரசும், பா.ஜ.க.வும் தலா 1 கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளன.டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி அரசு அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை மற்றும் 1 கோடி வழங்கும் என்று தெரிவித்தார். இதுவரை மோதல்களில் குறைந்தது 23 பேர் உயிரிழந்துள்ளனர்