ரூபிக் கியூப்சால் உருவாக்கப்பட்ட மோனலிசா ஓவியம் 3,00,00,000 ஏலம்..!
- பிரான்ஸில் பிரபல கலைஞர் ஒருவர் “ரூபிக் கியூப்ஸ்” என்ற விளையாட்டு பெருள்களை வைத்து மோனலிசா அவர்களின் ஓவியத்தை வடிவமைத்துள்ளார்.
- பாரீசில் உள்ள பிரபல ஏல நிறுவனம் நடத்திய ஏலத்தில் மோனலிசாவின் ஓவியம் ரூ.3 கோடியே 70 லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது.
பிரான்ஸில் பிரபல கலைஞர் ஒருவர் குழந்தைகள் அறிவு திறனை அதிகரிக்க உதவும் “ரூபிக் கியூப்ஸ்” என்ற விளையாட்டு பெருள்களை வைத்து மோனலிசா அவர்களின் ஓவியத்தை வடிவமைத்துள்ளார்.
மோனலிசாவின் ஓவியம் புன்னகை மாறாமல் அந்த கலைஞர் அப்படியே வடிவமைக்கப்பட்டதால் இந்த ஓவியம் கலைகளை விரும்புவார்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.மோனலிசாவின்இந்த ஓவியம் பிரான்சில் பல அருங்காட்சியகங்களில் காட்சிக்காக வைக்கப்பட்டது.
இந்நிலையில் பாரீசில் உள்ள பிரபல ஏல நிறுவனம் கடந்த 23-ம்தேதி இந்த ஓவியத்தை ஏலத்தில் விட்டது. இந்த ஓவியத்தின் ஆரம்ப விலை இந்திய மதிப்பில் ரூ.1 கோடியாக நிர்ணயிக்கப்பட்டது.பின்னர் தொடங்கிய இந்த ஏலம் விறுவிறுப்பாக சென்றது.
மோனலிசாவின் இந்த அழகிய ஓவியத்தை வாங்க அனைவரும் போட்டி போட்டுக் ஏலம் கேட்டனர். இறுதியில் மோனலிசாவின் ஓவியம் ரூ.3 கோடியே 70 லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது.