அமைச்சர் வேலுமணி மீதான ஊழல் வழக்கு : பதிலளிக்க உத்தரவு
அமைச்சர் வேலுமணி மீதான வழக்கினை ஏப்ரல் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.
உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது அறப்போர் இயக்கம் மற்றும் திமுக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.அதில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவருக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே டெண்டர்களை ஒதுக்கி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தவதாக தெரிவிக்கப்பட்டது.மேலும் நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஆரம்ப கட்ட விசாரணை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு,அமைச்சரையும் எதிர் மனுதாரராக சேர்க்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.இந்த வழக்கில் ,அமைச்சர் வேலுமணி மீதான மாநகராட்சி டெண்டர் முறைகேடு குறித்து ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையையும், சாட்சிகளின் வாக்குமூலத்தையும் சீலிட்ட கவரில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது லஞ்ச ஒழிப்புத்துறை.
இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை மீண்டும் நடைபெற்ற நிலையில், விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும் லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் அமைச்சர் வேலுமணி மற்றும் சென்னை மாநகராட்சி பதிலளிக்க உத்தரவு பிறப்பித்து வழக்கு விசாரணையை ஏப்ரல் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்தது நீதிமன்றம்.