ஹஜ் பயண விண்ணப்பங்களையும் ஏற்க வேண்டும்.! மோடிக்கு முதல்வர் கடிதம் .!
- இந்தியாவில் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள சுமார் 2 லட்சத்து 67 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 2 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது.
- தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணத்துக்கு விண்ணப்பித்த 6,028 பேரின் விண்ணப்பங்களையும் ஏற்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
ஹஜ் என்பது முஸ்லிம்கள் ஆண்டு தோறும் சவூதி அரேபியா நாட்டில் உள்ள மக்கா நகருக்கு மேற்கொள்ளும் புனிதப் பயணமாகும். இது முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஒரு முஸ்லிம் தன் வாழ்க்கையில் ஒருமுறையாவது இப்பயணத்தை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதையெடுத்து இந்தியாவை சேர்ந்த இஸ்லாமியர்கள் வருடம்தோறும் ஹஜ் புனித பயணம் செய்து வருகின்றனர். அவர்களை மத்திய அரசு ஹஜ் கமிட்டி அழைத்து சென்று வருகின்றனர். இந்த வருடம் இந்த ஹஜ் புனித பயணத்தில் மேற்கொள்ள சுமார் 2 லட்சத்து 67 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 2 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணத்துக்கு விண்ணப்பித்த 6,028 பேரின் விண்ணப்பங்களையும் ஏற்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.கடந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணத்தில் 4,300-க்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.