ட்ரம்ப் அதிரடி : வரி உயர்வு !!!
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், உள்நாட்டு தொழிலை காப்பாற்றும் நோக்கில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் அலுமினயத்திற்கு விதிக்கப்படும் இறக்குமதி வரியை கடுமையாக உயர்த்தியுள்ளார்.
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றது முதலே உள்நாட்டு தொழிலாளர்களை பாதுக்காக்கவும், உள்நாட்டு தொழில்களை காக்கவும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக எச் -1 பி விசா நடைமுறைகளை கடுமையாக்கினார். இதை தொடர்ந்து உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் இரும்பு மற்றும் அலுமனியத்தை பாதுகாக்கவும், இறக்குமதியை தடுக்கும் பொருட்டும், இறக்குமதி வரியை ட்ரம்ப் கடுமையாக உயர்த்தியுள்ளார்.
அதன்படி இரும்புக்கு 25 சதவீதமும், அலுமினியத்திற்கு 10 சதவீதமும் இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவிற்கு அதிகஅளவில் இரும்பு ஏற்றுமதி செய்து வருகிறது. எனினும் இந்தியாவில் இருந்து குறைந்த அளவிற்கே அமெரிக்காவிற்கு இரும்பு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இதுகுறித்து இந்திய இரும்புத்துறை செயலாளர் அருணா சர்மா கூறுகையில் ‘‘இந்தியாவி்ல் இருந்து அமெரிக்காவிற்கு 2 சதவீத அளவிற்கு மட்டுமே இரும்பு ஏற்றுமதி செசய்யப்படுகிறது. எனவே இதனால் இந்தியாவிற்கு பெரிய பாதிப்பு எதுவும் இல்லை’’ எனக் கூறினார்.
அதேசமயம் அமெரிக்க தயாரிப்புகளுக்கு மற்ற நாடுகள் வரியை குறைக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. இதுகுறித்து சமீபத்தில் கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அமெரிக்காவன் ஹார்லி டேவிட்சன் பைக்குகளுக்கு பிரதமர் மோடி உறுதியளித்தபடி இந்தியாவில் வரியைக் குறைக்கவில்லை. இது சரியான வர்த்தகம் அல்ல’’ என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் தகவலுக்கு இணைந்திடுங்கள் தினச்சுவடு