1000 பேர் கொலை !!!
சிரியாவில் ராணுவத்திற்கும் புரட்சி குழுவினருக்கும், கடந்த 11 நாட்களாக நீடிக்கும் சண்டையில், இதுவரை ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக, சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் படை போராடி வருகிறது. இத்தகைய புரட்சி குழுவினருக்கு அமெரிக்கா, சவூதி அரேபியா, துருக்கி உள்ளிட்ட நாடுகள் உதவி வருவதாக கூறப்படுகிறது.
சிரிய அரசுக்கு ரஷ்யா உதவி வருகிறது. இந்த இருதரப்பு மோதலில், கடந்த 11 நாட்களில் மட்டும், பொதுமக்களில் சுமார் 1000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, சர்வேதச தன்னார்வ அமைப்புகள், ஐ.நா உதவிக் குழுக்களை சேர்ந்த அதிகாரிகள், இந்த மோதலை பயன்படுத்தி, சிரியா பெண்களுக்கு பாலியல் தொல்லை அளிப்பதாக, திடுக்கிடும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் உணவு, மருந்து போன்ற உதவிகளை பெற வரும்போது இவ்வாறு பாதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போதைய உள்நாட்டுப் போரால், சிரியா பெண்கள் மற்றும் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் சில புகைப்படங்கள், தற்போது எடுக்கப்பட்டவை அல்ல என கூறப்படுகிறது. பல புகைப்படங்கள், சிரியாவில் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டவை, என்றும், ஈராக் போரின்போது எடுக்கப்பட்ட புகைப்படமும் தற்போது வைரலாக பரப்பிவிடப்படுவதாகக் கூறப்படுகிறது.
மேலும் தகவலுக்கு இணைந்திடுங்கள் தினச்சுவடு