#Breaking: டெல்லி வன்முறையில் காவலர் உயிரிழப்பு-144 தடை உத்தரவு பிறப்பிப்பு
டெல்லியில் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் காவலர் ரத்தன்லால் உயிரிழந்துள்ளனர்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லியில் யமுனா விஹார் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது.குடியுரிமை திருத்த சட்ட ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களிடையே நடந்த மோதலில் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.நிலைமையை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள்
இந்நிலையில் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் காவலர் ரத்தன்லால் உயிரிழந்துள்ளனர்.கோலாக்பூரி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார் ரத்தன்லால். டெல்லி வடகிழக்கு மாவட்டத்தில் 10 இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பித்தது காவல்துறை.