பீகார் சட்டமன்றத்தில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு…தப்பிப்பாரா நிதிஷ்குமார்

Default Image

நிதிஷ் குமார் தனது முதல்வர் பதவியை கடந்த  புதன்கிழமை அன்று மாலை திடீரென தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

பின்பு பீகார் அரசியலில் அதிரடி திருப்பமாக நிதிஷ் குமாருக்கு பாஜக ஆதரவு அளிக்க முன்வந்தது. இதையடுத்து நிதிஷ் குமார் நள்ளிரவில் மீண்டும் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதை பெற்றுக்கொண்ட பொறுப்பு ஆளுநர் மாநிலத்தில் அரசை அமைக்குமாறு நிதிஷ் குமாருக்கு அழைப்பு விடுத்தார்.

அதன்படி வியாழக்கிழமையன்று காலை பீகார் முதல்வராக 6வது முறையாக நிதிஷ் குமார் பதவியேற்றுக்கொண்டார். துணை முதல்வராக பாஜகவைச்சேர்ந்த சுஷில் குமாரும் பதவி ஏற்றனர். புதிதாக பதவியேற்றுள்ள நிதிஷ் குமார், சட்டசபையில் 2 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி பீகார் சட்டசபையின் ஒருநாள் சிறப்பு கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் நிதிஷ் குமார், தனது அரசுக்கு நம்பிக்கை வாக்கு கோருவார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

243 உறுப்பினர்கள் கொண்ட சட்டசபையில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிக்கு 80 உறுப்பினர்கள்; காங்கிரஸுக்கு 27 என மொத்தம் 107 எம்ம்.எல்.ஏக்க்கள் உள்ளனர்.நிதிஷ்குமாருக்கு ஜனதா தளக் கட்சியின் 71 எம்எல்ஏக்களுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்கள் 58 என 129 எம்.எல்.ஏக்க்கள் உள்ளனர். பெரும்பான்மைக்கு தேவை 122 எம்.எல்.ஏக்கள் என்பது குறிப்பிடத்தக்கது

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tamil news live
meena (10) (1)
Red Alert - Heavy Rains
Tamilnadu Speaker Appavu
parliament winter session 2024
Allu Arjun in chennai
Tamilnadu CM MK Stalin - PMK Leader Dr Ramadoss