சபர்மதி ஆசிரமத்தில் மனைவியுடன் ராட்டையை சுழற்றிய அதிபர் ட்ரம்ப்.!
- அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 2 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்தார்.
- சபர்மதி ஆசிரமத்தில் இருந்த ராட்டையை மனைவியுடன் சுற்றி பார்த்த டொனால்ட் ட்ரம்ப்.
2 நாள் அரசு முறை பயணமாக இந்தியாவிற்கு வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை இந்திய பிரதமர் நரேந்திர மோடி கட்டி தழுவி வரவேற்றார். பின்னர் விமனநிலையத்தில் குஜராத் முறைப்படி டிரம்புக்கு கலைநிகழ்ச்சிகளுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதன் பின் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பிரதமர் மோடி சபர்மதி ஆசிரமத்திற்கு புறப்பட்டு சென்றனர்.இதையெடுத்து மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்தை வந்தடைந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் மனைவி மெலனியா ஆகிய இருவருக்கும் சபர்மதி ஆசிரமத்தில் காந்திய முறைப்படி கதர் துண்டு அணிவித்து வரவேற்பு கொடுக்கப்பட்டது.
பின்னர் சபர்மதி ஆசிரமத்தை அதிபர் டிரம்ப் மற்றும் மனைவி மெலனியாவிற்கு மோடி சுற்றி காட்டினார்.இதையெடுத்து சபர்மதி ஆசிரமத்தில் இருந்த ராட்டையில் நூல் நூற்கும் முறையைப் பற்றிய சபர்மதி ஆசிரம நிர்வாகி டிரம்ப்பிற்கு விளக்கி காட்டினார். சபர்மதி ஆசிரம நிர்வாகி விளக்கிய பிறகு மனைவியுடன் அதிபர் ட்ரம்ப் ராட்டையை சுழற்றி பார்த்தார்.
பிறகு ஆசிரமத்தில் இருந்த விருந்தினர் பதிவேட்டில் அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டு தனது கருத்தை பதிவிட்டார்.