பெண்கள் பாதுகாப்பு தினம் கொண்டாட என்ன தகுதி இருக்கு!!?-ஸ்டாலின் சுளீர்
பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை கொண்டாட என்ன தகுதி இருக்கிறது என்று மதுரை ஒத்தக்கடையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
மதுரை ஒத்தக்கடையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மு.க ஸ்டாலின் முன்னிலையில் அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் உள்ளிட்ட பலர் திமுகவில் இணைந்தனர்.இந்த நிகழ்ச்சியில் பேசிய மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் நிதி நிலைமையோ கோமா நிலையில் சென்று கொண்டிருக்கிறது. திமுக ஆட்சியில் ரூ.1 லட்சம் கோடியாக இருந்த தமிழகத்தின் கடன் கடந்த 3 ஆண்டில் ரூ.4.65 லட்சம் கோடியாக அதிகரித்து உள்ளது.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியை விட முதல்வர் பழனிசாமியின் ஆட்சியில் தான் கடன் தொகை பலமடங்கு அதிகரித்து உள்ளது. பழனிசாமி ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையோ கவலை தருவதாக இருக்கிறது.பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் கொண்டாட அதிமுக அரசுக்கு என்ன தகுதி இருக்கிறது? ஆளுங்கட்சியினர் வைத்த பேனர் விழுந்து சென்னையில் இளம்பெண் சுபஸ்ரீ இறந்தார். அதே போல் கோவையில் அனுராதா என்பவர் காயமடைந்தார். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை கொண்டாட அதிமுக அரசுக்கு தகுதி இல்லை என்று விமர்சித்து பேசினார்.
இந்நிலையில் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர்கள் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வளாகங்கள் அமைத்தல்” பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம், தந்தையை இழந்த பெண் குழந்தைகளுக்கு உதவித்தொகை, வளரிளம் பெண்களுக்கான சிறப்பு திட்டங்கள் போன்ற புதுமையான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்திக் காட்டியவர் ஜெயலலிதா பெண்குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக சிறப்பு கவனம் எடுத்து புதுப்புது திட்டங்களை நிறைவேற்றிய இவரது பிறந்த நாளை தமிழக அரசு பெண்குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கொண்டாட தமிழக அரசு அறிவித்து அதற்கான அரசாணையும் பிறப்பித்தது. அதன்படி குழந்தைகளுக்காக, குறிப்பாக பெண் குழந்தைகளுக்காக ஜெயலலிதா ஆற்றிய உயர்ந்த சேவையினை நினைவு கூறத்தக்க வகையில், அவர்களின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ந் தேதியை, “மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக” அனுசரிக்க அரசு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.