கூகுள்-பே செயலியில் நடக்கும் மோசடி.. தடுக்கும் சில வழிமுறைகள்!

Default Image
  • கூகுள்-பே செயலி மூலம் மோசடிகள் தொடர்ந்து நடைபெற்றுகொண்டு வருகிறது.
  • அதனை தடுக்கும் வகையில், “பிளாக் (Block)” செய்யும் முறையை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்ல் அறிவித்தது.

இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் இணையதளத்தை நம்பி உள்ளனர். ஆடை வாங்குவதில் இருந்து பணம் அனுப்பும் வரை அனைத்தையும் டிஜிட்டல் வாலட் மூலம் பணப் பரிவர்த்தனை செய்து கொள்கின்றனர். இது நமக்கு அதிக பலன்களை வழங்கி வருகிறது என்றாலும், இதில் மோசடி செய்யும் கும்பல் களும் அடங்கி வருகின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலம், தானே பகுதியில் வசிக்கும் ஒரு நபர் கூகுள் பே மூலம் ஒரு லட்ச ரூபாயை இழந்தார். இதுபோன்ற ஊழல்கள் நடக்காமல் இருக்க, கூகுள் நிறுவனம் குறிப்பிட்ட அந்த நபரை நீங்கள் பிளாக் செய்யும் முறையை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இல் அறிவித்தது.

1. முதலில் உங்களது மொபைலில் கூகுள் பே செயலிக்கு உள்நுழையவும்.

2. நீங்கள் இதுவரை மேற்கொண்ட பண பரிவர்த்தனைகளை பார்க்க ஸ்லைடு அப்(slide up) செய்ய வேண்டும். அதே இடத்தில் உங்களிடம் பணம் கோரிய காண்டாக்ட் விவரங்களும் பட்டியலாகி இருக்கும்

3. அதில் நீங்கள் பிளாக் செய்யும் நபரை தேர்வு செய்ய வேண்டும்.

4. அவரின் தொலைபேசி எண் உங்களின் காண்டக்ட்டில் பதிவு செய்திருந்தால், மோர் ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.

5. அங்கு அந்த நபரை நீங்கள் பிளாக் செய்யலாம்.

6. ஒருவேளை நம்பர் சேவ் செய்யப்படவில்லையெனில், பிளாக் செய்வதற்கான ஆப்ஷன் தானாக தெரியும். 

7. அதில் நீங்கள் அந்த நபரை பிளாக் செய்யலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்