ஓட்டலுக்கு வாடகை தராமல் சென்ற தனுஷ் பட நடிகை.!
- நடிகை மெஹரின் பிர்ஸடா “அஸ்வத் தாமா” புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஹைதராபாத்தில் ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தார்.
- கடைசி நாளில் மற்றொரு நிகழ்ச்சி கலந்து கொள்ள மெஹரின் மறுப்பு தெரிவித்தால் ஹோட்டலுக்கு வாடகை தர மாட்டேன் என தயாரிப்பாளர் கூறினார்.
தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ள நடிகை மெஹரின் பிர்ஸடா . தமிழில் “நோட்டா”, “பட்டாஸ்” ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் தற்போது “அஸ்வத் தாமா” என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் சக நட்சத்திரங்களுடன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்காக ஹைதராபாத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் இவர் தங்கியிருந்தார். கடைசி நாளில் மற்றொரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தயாரிப்பாளர் மெஹரின் பிர்ஸடா அழைத்தார்.
ஆனால் தனக்கு ஸ்கின் அலர்ஜி ஏற்பட்டு இருப்பதாக கூறி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மெஹரின் பிர்ஸடா மறுப்பு தெரிவித்தார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நீங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாவிட்டால் ஹோட்டலுக்கு வாடகை தர மாட்டேன் என தயாரிப்பாளர் கூறினார்.
இதனால் கோபமடைந்த மெஹரின் பிர்ஸடா மறு நாள் காலையில் யாரிடமும் சொல்லாமலும் வாடகை தராமல் சென்றுவிட்டார். இதையறிந்த ஹோட்டல் நிர்வாகிகள் அறைக்கு வாடகை தரும்படி தயாரிப்பாளரிடம் கேட்டு உள்ளர். அதற்கு தயாரிப்பாளர் வாடகை தர மறுத்துவிட்டார். பின்னர் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து அவர் வாடகையை செலுத்தி விடுவதாக கூறினார்.