குழந்தைபாக்கியம் தள்ளிப்போக வீட்டின் இந்த அமைப்பு தான் காரணமா?

Default Image

இல்லற வாழ்வில் மிக முக்கியமான பந்தம் என்றால் அது குழந்தை தான் கணவன் மனைவியையும் கட்டிவைக்கும் அன்புக்கயிராக திகழ்வது அக்குழந்தை தான்.தம்பதிகள் இருவருக்குள் கடுமையான சண்டை நிலவிய போதும் குழந்தைக்காக மறுநிமிடமே தங்களது கோபத்தை தூக்கி ஏறிந்தவர்கள் ஏராளாலம்.அத்தகைய குழந்தை பாக்கியம் தள்ளிப்போக அல்லது குழந்தை பாக்கியம் கிடைக்காமல் போவதற்கு  வாஸ்து சாஸ்திரம் ஒரு காரணமாக இருக்குமா?  என்ற இந்த கேள்விக்கு பதிலை தேடியபோது அதில் சில தகவல்களை ஆன்றார்கள் அளித்துள்ளனர் அவற்றைப் பற்றி பார்ப்போம்.

திருமணமாகிய சில மாதம் அல்லது சில வருடங்களில் குழந்தை பாக்கியம் என்பது கிடைக்க வேண்டும். அவ்வாறு இன்றி குழந்தை பாக்கியம் தள்ளிப்போகின்ற பட்சத்தில் அப்பெண்ணிற்கு இச்சமுதாயம் சூட்டும் பெயர் மலடி.இதை எண்ணி நொந்து நூலாகி மனவேதனை அடைவார்கள் அவர்களின் வேதனையை சொல்லிமாலாது.எதற்கு பிறந்தோம் பூமிக்கு பாராம் என்றெல்லாம் கூட என்னுவார்கள் அத்தகைய நினைப்பிற்கு எல்லாம் தள்ளப்படுவார்கள்.

இந்த பிரச்சனை இக்காலம் மட்டுமல்லாமல் அக்காலத்திலும் இருந்துள்ளது. அரசமரத்தை சுற்றுவார்கள்.மருத்துவமனையில் இதற்கு என்ன வழி என்று பல சோதனைகளை மேற்கொண்டு சிகிச்சை பெறுவது.ஆன்மீக வழியில் கோவில்களில் வேண்டுதலகளை நிறைவேற்றுவது இவ்வாறு பல முயற்சிகள் எடுத்துப் பலனளிக்காமல், கடைசியாக தனக்கும் தன்னுடைய சொத்திற்கும், தன்னைக் கடைசி காலத்தில் பார்த்துக் கொள்ள போகிறார்கள் என்னோடு எனது வம்சம் முடிவுற்றதா? என்றெல்லாம் புலம்புவார்கள்.

இந்த விஷயத்தில் வீட்டின் அமைப்பும் ஒருகாரணமாக இருக்குமா? என்ற கேள்வி எழுந்த நிலையில் நமது வீட்டில் எந்தப் பகுதியில் என்ன தவறு இருந்தால் இதுபோல  நடக்கும் என்பதைப் பார்ப்போம்….

கிழக்குப் பகுதி முழுவதையும் அடைப்பட்ட வீட்டின் அமைப்பு இருத்தல். தென்கிழக்கு பகுதியில் தெருப் பார்வையான அமைப்பு. செப்டிக்டேங்க் தென்கிழக்கு பகுதியில் மற்றும் தென்மேற்கு பகுதியில் இருந்தாலும். கோபுர கேஸ், தென்கிழக்கு பகுதியில் மற்றும் தென்மேற்கு பகுதியில் இருந்தாலும். உள் மூலைப்படி அமைப்புகள் இருப்பது. போர், கிணறு, சம்பு அல்லது தண்ணீர் தொட்டி போன்ற அமைப்புகள் தென்மேற்கு, வடமேற்கு பகுதியில் இருத்தல் போன்றவைகள் அமைப்பது தவறு என்கிறது வாஸ்து சாஸ்திரம் .

இவ்வாறு வீட்டிற்குள் தவறான அமைப்புகள் இருக்கும் போது வீட்டில் சுபநிகழ்ச்சி நடைபெறுவது தவிர்க்கபட்டு எதிர்மறையான ஆற்றல் நிலவுகிறது.மேலும் மனகஷ்டம்,கவலை போன்றவைகளை ஏற்படுத்துகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்