வரலாற்றில் இன்று(23.02.2020)… கணித மேதை காஸ் மறைந்த தினம்…
கணித உலகத்திலேயே சிறந்த கணித வல்லுனர், எல்லாக் கால கணித இயலர்களுக்கும் சவாலாக விளங்கும், கணித மேதையான காஸ் குறித்த செய்தி தொகுப்பு.. இவர், ஐரோப்பாவின் ஜெர்மனியில், ஏப்ரல்மாதம் 30ஆம் நாள் 1777ஆம் ஆண்டு பிறந்தார். இவரது, தந்தை கெப்பார்ட், இவர் ஒரு சாதாரண ஏழைத்தொழிலாளி. தாய் டொரொத்தியா கெப்பார்டுக்கு இரண்டாம் மனைவியாகும் முன் வீடுகள்தோறும் சுத்தம் செய்யும் வேலையில் ஈடுபட்டிருந்தவர். கு சம்பளம் தரும்போது அவர் கணிப்பில் தவறு ஒன்றைக் கண்டுபிடித்தவன். இவர் கணிதம், இயற்பியல், வானியல்,புவிப்பரப்பு ஆகிய நான்கு துறைகளிலும் கணிசமாகப் பங்களித்தவர். கணிதத்தில், எண் கோட்பாடு, பகுவியல், வகையீட்டு வடிவியல் ஆகிய மூன்றிலும் பற்பல விதங்களில் தனது பங்களிப்பை தந்தவர். இவர் தனது கணிப்புகளில் அபார வல்லமை பொருந்தியவராக இருந்ததால், வானியல், புவிப் பரப்பு, எண் கோட்பாடு இம்மூன்றிலும் இன்றியமையாத நீண்ட கணிப்புகளைச் செய்து சாதனை புரிந்தவர். உதாரணமாக, இவர் தனது, ஏழாவது வயதில் ஒரு நாள் வகுப்பில் நுழைந்ததுமே, எல்லா மாணவர்களையும் பேசாமல் இருக்கச் செய்வதற்காக இவரது ஆசிரியர் கொடுத்திருந்த ஒரு கணக்கை நொடியில் முடித்து அவரை அசர வைத்தான் சிறுவன் காஸ். 1 இலிருந்து 100 வரையுள்ள முழு எண்களின் கூட்டுத் தொகையைக் கணக்கிடும் கணிப்புதான் அது. காஸுக்கு உடனே தோன்றியது: 1 முதல் 100 வரையில் உள்ள எண்களில் 50 ஜோடிகள் இருக்கின்றன; அதாவது, முதல் எண்ணும் கடைசி எண்ணையும் தொடர்ந்து கூட்டுவது, {1, 100}, {2, 99}, {3, 98}, முதலியவை; ஒவ்வொன்றின் கூட்டுத்தொகை 101. ஆக 50 ஜோடிகளின் கூட்டுத்தொகை 5050. ஆசிரியருக்கு ஆச்சரியத்தில் மாணவன்மேல் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. இத்தகைய கணித அபாரத்திறமையால் திகழ்ந்த காஸ் மறைந்த தினம் (பிப்ரவரி 23, 1855)வரலாற்றில் இன்று.