த்ரிஷாவை எச்சரித்த தயாரிப்பாளர் எதற்காக தெரியுமா?

த்ரிஷாவை எச்சரித்த தயாரிப்பாளர் சிவா.
நடிகை திரிஷா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இயக்குனர் திருஞானம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பரமபதம் விளையாட்டு. இந்தப் படத்தின் பிரி பிரமோஷன் விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் முக்கியமான பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய தயாரிப்பாளரும் நடிகருமான சிவா, நான் இன்னும் படம் பார்க்கவில்லை. ஆனால் படம் பார்த்த என் நண்பர்கள் சிறப்பாக இருக்கிறது என்று கூறினார்கள். பெரிய நாயகன் இல்லாமல், விளம்பர நோக்கமும் இல்லாமல், இயக்குனர் சிவஞானம் படத்தை இயக்கி இருக்கிறார் என்று கூறியுள்ளார்கள்.
இப்படிப்பட்ட படத்தின் விளம்பரத்திற்கு த்ரிஷா வரவில்லை என்பது வருத்தத்துக்குரிய விஷயம். தொடர்ந்து அவர் விளம்பரத்துக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் இருந்தால் சம்பளத்திலிருந்து ஒரு பகுதியை தயாரிப்பாளருக்கு திருப்பித் தரவேண்டும் என்று, தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பாக எச்சரிக்கை விடுக்கிறேன் என்று கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
சென்னையில் கால்பந்து போட்டி.., போக்குவரத்து மாற்றம்.! ரூட்டை பார்த்து தெரிஞ்சிக்கோங்க…
March 29, 2025
தனக்குத்தானே எக்ஸ் தளத்தை வியாபாரம் செய்த எலான் மஸ்க்.! வாங்குனது எவ்வளவு? விற்றது எவ்வளவு?
March 29, 2025