நடக்கிறனா ஒழுங்கா நட! கடுப்பான சமந்தா!
நடப்பது என்றால் ஒழுங்காக நட, இந்த இடத்தில் போட்டோ எடுக்குற வேலையெல்லாம் வேண்டாம்.
நடிகை சமந்தா ‘விண்ணை தாண்டி வருவாயா’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர், நடிகர் நாகார்ஜூனா மகன் நடிகர் நாக சைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில், நடிகை சமந்தா, ஜானு பட வெற்றிக்காக திருப்பதி கோவிலுக்கு படி வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது அவரை பார்த்த தமிழ் ரசிகர் ஒருவர் அவருடன் செல்பி எடுக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சமந்தா ‘நடப்பது என்றால் ஒழுங்காக நட, இந்த இடத்தில் போட்டோ எடுக்குற வேலையெல்லாம் வேண்டாம்.’ என கோபமாக கூறியுள்ளார்.