ஜடேஜா போல விளையாட வேண்டும்.!ஹாட்ரிக் ஆஷ்டன் அகர்.!

Default Image
  • நேற்று நடைபெற்ற டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.ஆஸ்திரேலிய வீரர் ஆஷ்டன் ஹாட்ரிக் விக்கெட்டை பறித்தார்.
  • செய்தியர்களிடம் பேசிய ஆஷ்டன் அகர், ஜடேஜா போல நானும் விளையாட வேண்டும் என விரும்புகிறேன் என கூறினார்.

தற்போது ஆஸ்திரேலியா அணி தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி 20 தொடர்களில் விளையாடி வருகிறது.முதலில் டி20 தொடர்களில் இரு அணிகளும் விளையாடி வருகிறது.

நேற்று முதல் டி 20 போட்டி நடைபெற்றது. முதலில் இறங்கிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 196 ரன்கள் எடுத்தனர். பிறகு இறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 14.3 ஒவேரிலே அனைத்து விக்கெட்டையும் இழந்து 89 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதனால் இப்போட்டியில் ஆஸ்திரேலியஅணி 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஆஷ்டன் அகர் 24 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை பறித்தார்.அதில் ஹாட்ரிக் விக்கெட் அடங்கும்.பின்னர் போட்டி முடிந்த பிறகு செய்தியர்களிடம் பேசிய ஆஷ்டன் அகர் ,இந்தியாவுக்கு எதிரான தொடருக்குப் பிறகு நான் ஜடேஜாவிடம் பேசினேன். எனக்கு மிகவும் பிடித்த வீரர் ஜடேஜா.அவரை போல நானும் விளையாட வேண்டும் என விரும்புகிறேன்.

ஜடேஜா ஒரு ராக் ஸ்டார். அதிரடியாக விளையாடுவார் பந்தை சிறப்பாக சுழலச் செய்வார்.  என் கூறினார். பிரெட் லீ-க்குப் பின் ஹாட்ரிக் விக்கெட்  எடுத்த 2-வது ஆஸ்திரேலிய வீரர் ஆஷ்டன் அகர் ஆவார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்