அவதூறு வழக்கு -நாளை மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராக உத்தரவு..!

- அவதூறு வழக்கில் திமுக தலைவர் ஸ்டாலின் நாளை நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சி துறை முறைகேடு தொடர்பான அறிக்கை அடிப்படையில் ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.இந்த வழக்கின் விசாரணைக்காக நாளை ஆஜராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதனால் நாளை (பிப்ரவரி 24-ஆம் தேதி) நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க அளிக்க கோரியும்,வழக்கை ரத்து செய்யக்கோரியும் ஸ்டாலின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.மேலும் அந்த மனுவில்,அமைச்சர் வேலுமணி மீதான வழக்கை திசை திருப்பும் நோக்கில் என் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.ஸ்டாலின் மனு மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025