மருத்துவமனையில் துரைமுருகனை நேரில் சந்தித்த மு.க.ஸ்டாலின்.!

- திமுக பொருளாளர் துரைமுருகன் நெஞ்சுவலி காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் துரைமுருகனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
திமுக பொருளாளர் துரைமுருகன் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியது.
இதற்கு முன் கடந்த ஜூன் மற்றும் நவம்பர் மாதத்தில் ஏற்பட்ட உடல்நல குறைவால் துரைமுருகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் துரைமுருகனை மு.க ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். சிகிச்சை முடிந்து துரைமுருகன் இன்று வீடு திரும்பலாம் என கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஏப்ரல் 16 ஐபிஎல் “சூப்பர் ஓவர்” நாளா? மீண்டும் மீண்டும் அதே நாளில் டெல்லிக்கு நடந்த சம்பவம்!
April 17, 2025
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025