உயர் கல்வியில் தமிழகம் முதலிடம்.! முதல்வர் பழனிசாமி பெருமிதம்.!
- கடந்த 9 ஆண்டுகளில் உயர் கல்வியில் தமிழகம் 49 சதவீத வளர்ச்சியை அடைந்து நாட்டிலேயே முதலிடத்தில் இருப்பதாக முதல்வர் குறிப்பிட்டார்.
சென்னை அடுத்து திருப்போரூர் அருகே உள்ள காலவாக்கத்தில் SSN பொறியியல் கல்லூரி 20-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த பட்டப்பளிப்பு விழாவில் பேசிய முதல்வர், தான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன் என்றும் பட்டம் படித்தவர்களுக்கு பட்டம் வழங்குவது தனக்கு பெருமை அளிப்பதாகவும் கூறினார்.
மேலும், இவ்விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 1009 மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கினார். பின்னர் பேசிய அவர், கடந்த 9 ஆண்டுகளில் உயர் கல்வியில் தமிழகம் 49 சதவீத வளர்ச்சியை அடைந்து நாட்டிலேயே முதலிடத்தில் இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார். இதையடுத்து கல்வித்துறையில் தமிழகம் எண்ணற்ற சாதனை படைத்துள்ளது என்று தெரிவித்தார்.