#Breaking: இந்தியன் 2 விபத்து-மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்.!
இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து தொடர்பாக வழக்கு மத்திய குற்றப்பிரிவிக்கு மாற்றம் என சென்னை காவல் ஆணையம் அறிவுப்பு. படப்பிடிப்பு விபத்தில் உதவி இயக்குனர் உட்பட 3 பேர் உயிரிழந்த நிலையில், தொடரப்பட்ட வழக்கு மத்திய பிரிவுக்கு மாற்றம் செய்துள்ளது.
இந்த நிலையில் இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து தொடர்பாக கிரேன் ஆப்ரேட்டர் ராஜன் தலைமறைவாக இருந்த நிலையில் போலீசார் கைது செய்துள்ளனர். இதற்குமுன் நடிகர் கமல், இயக்குநர் ஷங்கருக்கு சம்மன் அனுப்ப போலீஸ் முடிவு செய்துள்ளனர். மேலும் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக லைக்கா, தயாரிப்பு நிர்வாகி, கிரேன் உரிமையாளர், கிரேன் ஆப்ரேட்டர் உள்ளிட்டவர்கள் மீது 4 பிரிவின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.