கடந்த மூன்று நாட்களில் குறைந்த கொவிட்-19 மீண்டும் உயர்வு.! மருத்துவர்கள் அச்சம்.!
- சீனாவில் கொவிட்-19 வைரஸ் பாதிப்பு கடந்த மூன்று நாட்களில் குறைந்து காணப்பட்ட நிலையில், நேற்று சற்று அதிகரித்து அந்நாட்டில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகரான உகானில் இருந்து நாடு முழுவதும் பரவிய கொவிட்-19 வைரஸ், தற்போது சீனாவை மட்டுமின்றி உலகம் முழுவதையும் கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசால் பாதிக்கப்படுவார்கள் எண்ணிக்கையும், உயிரிழப்பின் எண்ணிக்கையும் தினமும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் சீன மருத்துவர்களும், அரசும் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து இருக்கின்றனர். இதனிடையே நேற்று முன்தினம் வைரஸ் தாக்குதல் பெரிய அளவில் இருந்து குறைய தொடங்கியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்தது.
இந்நிலையில், கொவிட்-19 வைரசால் பலி எண்ணிக்கை நேற்று (வியாழக்கிழமை) வரை 118 பேர் உயிரிழந்து நாடு முழுவதும் 2236-ஆக உயர்ந்துள்ளது. மேலும் புதிதாக 889 பேருக்கு இந்த வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுவும் 411 ஹூபேயிலிருந்து வந்தவர்கள் என கூறப்படுகிறது. இது கடந்த மூன்று நாள்களை விட மீண்டும் வைரஸ் பாதிப்பு அதிகரித்த நிலையில் மருத்துவர்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் இந்த வைரசால் நாடு முழுவது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 75,465-ஐ எட்டியுள்ளது என தேசிய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.