உலகக்கோப்பை தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்யுமா இந்திய அணி..?

  • ஐ.சி.சி மகளிர் டி20 உலகக் கோப்பை 2020 தொடரில் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது.
  • டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியான இன்று இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளனர்.

ஐ.சி.சி மகளிர் டி20 உலகக் கோப்பை 2020 தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ்  உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொண்டு விளையாட உள்ளனர்.இதில் ஏ , பி என இரு பிரிவுகள் உள்ளன. அதில் ஏ , பி என இரு பிரிவுகளிலும் தலா 5 அணிகள் இடம்பெற்று உள்ளனர்.

இந்த டி20 உலகக் கோப்பைதொடரின் இறுதிப் போட்டி சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8-ம் தேதி நடைபெற உள்ளது.இந்நிலையில் இன்று இந்த டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டி தொடங்க உள்ளது. இந்த முதல் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோத உள்ளனர்.

இந்திய மகளிர் அணியில் ஸ்மிருதி மந்தானா, ஹர்மன்பிரீத் கவுர் உள்ளிட்ட நட்சத்திர வீராங்கனைகள் உள்ளனர். ஆனால் அனுபவமிக்க பந்துவீச்சாளர்கள் அணியில் இடம்பெற வில்லை. மேலும் சுழற்பந்துவீச்சை நம்பியே இந்திய அணி உள்ளது. சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற முத்தரப்பு டி20 தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டி வரை சென்றது  என்பது குறிப்பிடத்தக்கது.