அக்மல் விளையாட தடை விதித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.!
- பாகிஸ்தான் அணி வீரர் உமர் அக்மல் மீது லஞ்ச குற்றச்சாட்டு புகார் எழுந்து நிலையில்அது குறித்து உமர் அக்மலிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
- இதனால் அக்மல் அனைத்து வகையான போட்டிகளில் விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தற்காலிகமாக தடை விதித்து உள்ளது.
பாகிஸ்தான் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான உமர் அக்மல் மீது லஞ்ச குற்றச்சாட்டு புகார் எழுந்து நிலையில் தற்போது அது குறித்து உமர் அக்மலிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.இந்த விசாரணை முடியும் வரை அக்மல் அனைத்து வகையான போட்டிகளில் விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தற்காலிகமாக தடை விதித்து உள்ளது.
பாகிஸ்தானில் விரைவில் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் குவெட்டா கிளேடியேட்டர்ஸ் அணியில் அக்மல் இடம்பெற்று இருந்தார்.இதையெடுத்து அக்மலுக்கு பதில் மாற்று வீரரை சேர்த்துக்கொள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அனுமதி கொடுத்துள்ளது.
அக்மல் பாகிஸ்தான் அணிக்காக இதுவரை 16 டெஸ்ட் , 121 ஒருநாள் போட்டிகளிலும், 84 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.