#Breaking: பழைய திட்டங்களை நிறுத்தினால் சட்ட சிக்கல் ஏற்படும் – முதல்வர்.!
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று நடைபெற்று வருகிறது. அப்போது காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றக்கூடிய சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்தார். அதில் தஞ்சாவூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களை வேளாண் மண்டலமாக அறிவித்தார்.
இதையடுத்து பேசிய அவர், காவிரி டெல்டா மாவட்டங்களில் ஏற்கனவே இருக்கும் திட்டங்களை நிறுத்தினால் சட்ட சிக்கல் ஏற்படும். இதை வல்லுநர்களும் தெரிவித்தனர் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். பின்னர் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி என்பதால் திருச்சியை வேளாண் மண்டலத்தில் சேர்க்கவில்லை என கூறினார்.