உயர்நீதிமன்றம் சுகாதாரத் துறை செயலருக்கு உத்தரவு!
உயர்நீதிமன்றம் தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலுக்கு நடந்த தேர்தல் தொடர்பான ஆட்சேபங்கள் குறித்து பரிசீலித்து முடிவெடுக்க சுகாதாரத் துறை செயலருக்கு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் விதிகள் பின்பற்றப்படாததால், புதிதாக தேர்தல் நடத்த கோரியும், புதிய நிர்வாகிகள் பதவியேற்க தடை விதிக்கவும் வழக்கு தொடரப்பட்டது.
மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, 83 ஆயிரத்து 253 வாக்காளர்களில், 58 ஆயிரம் வாக்காளர்கள் தேர்தலை புறக்கணித்ததால், இந்த தேர்தல் செல்லாதது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, மனுதாரர் அளித்த மாற்று கருத்துகளை பரிசீலித்து முடிவெடுக்க சுகாதாரத் துறை செயலருக்கு உத்தரவிட்ட நீதிபதி, தேர்தல் தொடர்பான ஆவணங்களை பத்திரப்படுத்த மருத்துவ கவுன்சில் நிர்வாகிக்கு அறிவுறுத்தினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.