குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற பேரணி நிறைவு
சென்னையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் நடத்திய போராட்டம் நிறைவுபெற்றுள்ளது .
கடந்த சில தினங்களுக்கு முன் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமிய அமைப்பினர் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த போராட்டத்தை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக இஸ்லாமிய அமைப்புகள் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி இன்று சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்துவதாக அறிவித்தனர்.ஆனால் சென்னை உயர்நீதிமன்றம்,இன்று நடைபெறவுள்ள சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு மார்ச் 11-ஆம் தேதி வரை தடை விதிப்பதாக தெரிவித்தது.இதனால் கலைவாணர் அரங்கில் இருந்து இஸ்லாமிய அமைப்புகளின் முற்றுகை பேரணி தொடங்கியது.பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற இந்த பேரணி சேப்பாக்கத்துடன் நிறைவு பெற்றது.