நிதிஷ்குமார் அரசு தோல்வியடைந்து விட்டதாக பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு.!
- பீகாரில் கல்வி, மின்சாரம் போன்றவற்றை வழங்குவதில் நிதிஷ்குமார் அரசு தோல்வியடைந்து விட்டதாகவும் பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டினார்.
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியிலிருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட பிரசாந்த் கிஷோர், இதுதொடர்பாக பாட்னாவில் செய்தியளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது குடியுரிமை திருத்த சட்டத்தால் அந்த கட்சியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் தெரிவித்தார். பின்னர் முதல்வர் நிதிஷ்குமார் தன்னை மகனைப் போல் நடத்தியதாகக் கூறிய அவர், தன்னை கட்சியை விட்டு நீக்கி நிதிஷ்குமார் எடுத்த முடிவை மதிப்பதாகவும் குறிப்பிட்டார்.
இதைத்தொடர்ந்து பீகாரில் கல்வி, மின்சாரம் போன்றவற்றை வழங்குவதில் நிதிஷ்குமார் அரசு தோல்வியடைந்து விட்டதாகவும் பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டினார். மேலும் பாஜகவிடம் கூட்டணியில் இருந்தும் நிதிஷ் குமாரால் பீகாருக்கு சிறப்பு அந்தஸ்தை பெற்று கொடுக்க முடியவில்லை எனவும் கூறினார். இதையடுத்து தான் இருக்கும் வரை பீகாரின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன் என குறிப்பிட்ட பிரசாந்த் இளைஞர்களை ஒன்று சேர்ப்பதற்காக Baat Bihar Ki என்ற பிரச்சாரத்தை துவங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.