முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம்!
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கைத்தறி நெசவாளர் சங்கங்கள் ஊக்கத் தொகை பெற புதிய நிபந்தனைகளை நீக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தேசிய கைத்தறி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஊக்கத் தொகை பெற இதற்கு முன் நிபந்தனைகள் ஏதுமில்லாத நிலையில், தற்போது ஆண்டு பரிவர்த்தனை 30 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கக் கூடாது என உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், 3 ஆண்டுகளுக்கு மேல் ஊக்கத் தொகை பெற முடியாது என்று கூறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே 868 சங்கங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 69 ஆயிரத்து 30 நெசவாளர்கள் பயன்பெற்ற நிலையில், இனி 285 சங்கங்கங்களைச் சேர்ந்த 53 ஆயிரத்து 140 நெசவாளர்கள் மட்டுமே பயனடையும் நிலை ஏற்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார். இதனால் கைத்தறி விற்பனை, பணப்புழக்கம், நெசவாளர்கள் வேலை வாய்ப்பு உள்ளிட்டவை பாதிக்கப்படும் என்றும் கைத்தறித் தேக்கம், முதலீடு இழப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.