ரயில் நிலையங்களில் கூகுல் நிறுவனம் அளித்த இலவச வைபை இனி இல்லை… விடை பெற்றது கூகுல் நிறுவனம்

Default Image

தற்போது இந்தியா முழுவதும் ரயில் நிலையங்களில் பயணிகளின் பயன்பாட்டிற்காக ’இலவச வைபை’ என்ற பெயரில் இலவச இணையதள சேவை தற்போது பயன்பாட்டில் உள்ளது. இந்த சேவை கடந்த  2015-ம் ஆண்டு இந்திய பிரதமர் மோடியாலும், கூகுளின் சிஇஓவான சுந்தர் பிச்சையாலும் இணைந்து அறிவிக்கப்பட்ட இந்த திட்டம், 2016ம் ஆண்டு மும்பையின் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் முதன்முறையாக ‘ரெயில் டெல்’ என்ற நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. மேலும், தற்போது இந்த திட்டம் இந்தியாவின் பெரும்பாலான ரயில் நிலையங்களில் அமலில் உள்ளது. இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளில் ஜியோ உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களின் புதிய வருகையாலும், சந்தையில் ஏற்பட்ட கடும் போட்டியாலும் இணையதள சேவைக்கான கட்டணங்கள் பெருமளவில் குறைந்துள்ளன. இதனால் இந்தியமக்கள் பெரும்பாலும் வைபை போன்ற இலவச சேவைகள் மீது நாட்டம் காட்டுவதில்லை என்ற காரணத்தால் தாங்கள் இந்த ‘இலவச  வைபை திட்டத்தில்’ இருந்து விலக முடிவெடுத்திருப்பதாக கூகுள் நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில், இருப்பினும் கூகுள் நிறுவனம் விலகினாலும் ’ரயில் டெல்’ நிறுவனம் தாங்கள் தொடர்ந்து இந்த திட்டத்தின் மூலம் மக்களுக்கு இலவச இணையதள சேவையை வழங்குவோம் என அறிவித்துள்ளது. இதுகுறித்து தங்களுடைய அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ள அந்நிறுவனம், இதுவரை இந்திய மக்களுக்கு  இந்த சேவையில் இதுவரை ஒத்துழைப்பு வழங்கிய கூகுளுக்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்