அசத்தலான சேமியா அடை செய்வது எப்படி?
அசத்தலான சேமியா அடை செய்யும் முறை.
நம் குழந்தைகள் காலையில், வித்தியாசமான உணவுகளை செய்து கொடுக்கும் போது, விரும்பி சாப்பிடுவார்கள். தற்போது இந்த பதிவில் சுவையான சேமியா அடை செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- சேமியா – ஒரு கப்
- கெட்டியான தயிர் – ஒரு கப்
- மைதா மாவு – 2 மேசைக் கரண்டி
- வெங்காயம் – 1
- தக்காளி – 1
- இஞ்சி – ஒரு துண்டு
- பச்சை மிளகாய் – 2
- கறிவேப்பிலை கொத்தமல்லி – சிறிதளவு
- உப்பு – தேவைக்கேற்ப
- எண்ணெய் – 2 தேக்கரண்டி
செய்முறை
முதலில் அடை செய்ய தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் வெங்காயம், தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்க வேண்டும்.
பின் சேமியாவில் தயிரை ஊற்றி கிளறி, கால் மணி நேரம் ஊறவிடவேண்டும். பின்பு அதில் மைதா மாவை தூவி கிளற வேண்டும். பின், தேவையான அளவு உப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்க்க வேண்டும்.
பிறகு தவாவை காயவைத்து மாவை உருண்டையாக எடுத்து அடையாக தட்டவேண்டும். சுற்றி எண்ணெய் ஊற்றி இருபுறமும் வெந்ததும் எடுக்க வேண்டும். இப்போது சுவையான சேமியா அடை தயார்.