நகரும் ரேஷன் கடைகள் அமைக்க நடவடிக்கை- பேரவையில் அமைச்சர் செல்லூர் ராஜூ தகவல்
நகரும் ரேஷன் கடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
பட்ஜெட்டை துணை முதலமைச்சரும் ,நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பின்னர் தமிழக சட்டப்பேரவையை பிப்ரவரி 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார் சபாநாயகர் தனபால்.17-ஆம் தேதி காலை 10 மணிக்கு மீண்டும் சட்டசபை கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.அதன்படி 17-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடியது.
இதனைத்தொடர்ந்து நேற்றும் தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றது.அப்பொழுது அமைச்சர் செல்லூர் ராஜு பேசுகையில், தமிழகத்தில் பகுதி நேரத்திற்கு மாற்றாக, நகரும் ரேஷன் கடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக, திருச்சி பள்ளிவாயலில் நகரும் ரேஷன் கடைகள் அமைக்கப்படும். அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு துரிதப்படுத்தியிருக்கிறது என்று பேசினார்.